சர்வதேசச் சொத்து ஆலோசகரான நைட் ஃபிராங்க் என்ற நிறுவனம் டி சி பைட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘தரவு மையக் காலாண்டு 2023' என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாங்காக், ஹாங்காங், கோலாலம்பூர், மும்பை, சியோல், ஷாங்காய், சிங்கப்பூர், சிட்னி மற்றும் டோக்கியோ போன்ற வேகமாக வளர்ந்து வரும் ஒன்பதுச் சந்தைகளின் மீது ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (APAC) இந்த அறிக்கை பெரும் கவனம் செலுத்துகிறது.
ஷாங்காய், டோக்கியோ மற்றும் மும்பை ஆகியவை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த தரவு மையச் சந்தைகளாக உருவெடுத்துள்ளன.
இந்த ஆய்வின் மூலம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறந்த வளர்ச்சிக் களமாக இந்தியாவில் இருந்து மும்பை மட்டுமே உருவெடுத்துள்ளது.