TNPSC Thervupettagam

தரவுகள் தேக்க கணிமை அமைப்பு (Reservoir Computing System)

December 26 , 2017 2524 days 882 0
  • விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை நரம்பியல் பிணைய சில்லு (Neural Network Chip) ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தரவுகள் தேக்க கணிமை அமைப்பை பயன்படுத்தி கற்பித்தல் இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்தி மனிதர்களைப் போல சிந்திக்க வைக்க பயன்படுகிறது.
  • இந்த அமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பிணையமானது உரையாடலின் போது வார்த்தைகள் கூறப்படுவதற்கு முன்பே கணிப்பதோடு மட்டுமல்லாமல்,நடப்பு நிகழ்வுகளின்அடிப்படையில் எதிர்கால விளைவுகளை கணிக்க உதவுகின்றது.
  • தரவுகள் தேக்க கணிமை அமைப்பானது கடந்த காலத்தில் மிகப்பெரிய ஒளியியல் கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது கணினி அமைப்பை நினைவுகொள் மின்தடையை (Memristors) பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்கள். இந்த நினைவுகொள் மின்தடையை பொருத்த குறைவான இடவசதியே தேவைப்படும். மேலும் இது தற்போதுள்ள சிலிக்கான் அடிப்படையிலான மின்னணு சாதனங்களில் எளிதில் ஒருங்கிணைக்க முடியும்.
  • நினைவுகொள் தடை (Memristors) என்பது தர்க்க (logic) மற்றும் சேமிப்பகத் தரவுகள் (store data) ஆகிய இரண்டு வேலைப்பாடுகளையும் செய்கின்ற சிறப்பு வகை மின்தடை சாதனமாகும்.
  • இது வழக்கமான கணினி அமைப்புகளுடன் இருந்து முரண்படுகிறது. இதில் செயலிகள் நினைவகத் தொகுதிகளிலிருந்து தனியாக தர்க்கத்தை (logic) செயல்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்