தரவுகள் தேக்க கணிமை அமைப்பு (Reservoir Computing System)
December 26 , 2017 2671 days 986 0
விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை நரம்பியல் பிணைய சில்லு (Neural Network Chip) ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தரவுகள் தேக்க கணிமை அமைப்பை பயன்படுத்தி கற்பித்தல் இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்தி மனிதர்களைப் போல சிந்திக்க வைக்க பயன்படுகிறது.
இந்த அமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பிணையமானது உரையாடலின் போது வார்த்தைகள் கூறப்படுவதற்கு முன்பே கணிப்பதோடு மட்டுமல்லாமல்,நடப்பு நிகழ்வுகளின்அடிப்படையில் எதிர்கால விளைவுகளை கணிக்க உதவுகின்றது.
தரவுகள் தேக்க கணிமை அமைப்பானது கடந்த காலத்தில் மிகப்பெரிய ஒளியியல் கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது கணினி அமைப்பை நினைவுகொள் மின்தடையை (Memristors) பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்கள். இந்த நினைவுகொள் மின்தடையை பொருத்த குறைவான இடவசதியே தேவைப்படும். மேலும் இது தற்போதுள்ள சிலிக்கான் அடிப்படையிலான மின்னணு சாதனங்களில் எளிதில் ஒருங்கிணைக்க முடியும்.
நினைவுகொள் தடை (Memristors) என்பது தர்க்க (logic) மற்றும் சேமிப்பகத் தரவுகள் (store data) ஆகிய இரண்டு வேலைப்பாடுகளையும் செய்கின்ற சிறப்பு வகை மின்தடை சாதனமாகும்.
இது வழக்கமான கணினி அமைப்புகளுடன் இருந்து முரண்படுகிறது. இதில் செயலிகள் நினைவகத் தொகுதிகளிலிருந்து தனியாக தர்க்கத்தை (logic) செயல்படுத்துகிறது.