தரவுப் பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் மக்கள் தங்கள் தரவுகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் பல்வேறு வழிகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எண்ணிம ரீதியில் முன்னேறி வரும் உலகில் தற்போது நிலவி வரும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றைக் குறித்து விழிப்புணர்வினை எழுப்புவதற்காக இந்தத் தினமானது உலகளவில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளின் முக்கிய குறிக்கோள், இந்தத் துறையில் உள்ள சவால்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதும், தனியுரிமை தொடர்பான அவர்களின் உரிமைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப் படுத்துவதும் ஆகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘தனியுரிமைக்கு முன்னுரிமை அளியுங்கள்' என்பதாகும்.