மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் 2019 ஆம் ஆண்டிற்கான தரிசு நில வரைபடத்தின் 5வது பதிப்பை வெளியிட்டார்.
இந்த வரைபடமானது நில வளங்கள் துறை மற்றும் தேசியத் தொலைநிலை உணர்வு மையம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைபடமானது தரிசு நிலம் குறித்த வலுவான புவியியல் தகவல்களை வழங்குகின்றது.
இது பல்வேறு நில மேம்பாட்டு திட்டங்களின் மூலம் தரிசு நிலங்களை உற்பத்தி நிலைக்கு (நல்ல நிலை) மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
தரிசு நில வரைபடம் – 2019 ஆனது நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு வகையான தரிசு நிலப் பகுதிகள் பற்றிய தகவலை வழங்குவதோடு, நிலச் சீரழிவை நிவர்த்தி செய்வதற்கும் அவை உதவியாக இருக்கும்.