மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகமானது (Minister of Communications) தர்பன்-அஞ்சல் ஆயுள் காப்பீடு (DARPAN-PLI) எனும் செயலியை அண்மையில் வெளியிட்டுள்ளது.
புதிய இந்தியாவிற்கான ஊரக அஞ்சல் அலுவலகங்களின் டிஜிட்டல் முன்னேற்றம் எனும் திட்டத்தை (Digital Advancement of Rural Post Office for a New India-DARPAN) மத்திய அஞ்சல் துறையானது (Department of Posts) துவங்கியுள்ளது.
இந்த செயலியானது இந்தியாவில் எந்தவொரு பகுதிகளிலும் உள்ள அஞ்சல் அலுவலகக் கிளைகளில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (Postal Life Insurance) மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கான (Rural Postal Life Insurance policies) சந்தாக்களின் (Premium( வசூலிப்பில் உதவும்.
ஊரக அஞ்சல் அஞ்சலகங்களை ஆன்லைனில் அஞ்சலக மற்றும் நிதியியல் பரிவர்த்தனைகளை (Postal and Financial Transactions) மேற்கொள்ள செய்வதற்கு நாட்டில் உள்ள 1.29 லட்சம் ஊரக அஞ்சல் அலுவலகக் கிளைகளை (Rural Branch Post Offices) இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்
தொலைதூர (Remote) ஊரகப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் அஞ்சலக சேவைகளின் தரத்தின் முன்னேற்றத்தினை இத்திட்டம் உறுதி செய்யும்.
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது (Postal Life Insurance) நாட்டின் மிகவும் பழமையான ஆயுள் காப்பீட்டுத் தொடக்கமாகும்.