பீகார் மாநிலத்தின் ராஜ்கிரில் ஏற்பாடு செய்யப்பட்ட 4-வது சர்வதேச தர்மா -தம்மா (Dharma-Dhamma) மீதான கருத்தரங்கை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மதம் மற்றும் சமூகத்திற்கான ஆய்வு மையம் (Centre for Study of Religion and Society) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து நாளாந்தா பல்கலைக்கழகம் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
சிறந்த நல்லிணக்கமுடைய உலகை உருவாக்குவதற்கு உலகளாவிய கூட்டிணைவை ஏற்படுத்துவதற்கும், அதற்கு வேண்டிய ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியியல் நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்குவதற்கும் இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.
இந்தியா மற்றும் ஆசியான் கூட்டுப் பேச்சுவார்த்தை உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.