மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது, சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிகளில் ஒரு புதியத் திருத்தத்தினை அறிவித்துள்ளது.
GST சட்டத்தின் கீழ் பதிவு செய்யத் தேவையில்லாத ஆனால் சில குறிப்பிட்ட விதிகளின் கீழ் பணம் செலுத்த வேண்டிய நிறுவனங்களுக்கு TIN எண்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிகளின் கீழ், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் முறையே 40 லட்சம் ரூபாய் மற்றும் 20 லட்சம் ரூபாய் வருடாந்திர வருவாய் கொண்ட வணிகங்கள் GST தளத்தில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.