TNPSC Thervupettagam

தற்காலிக ‘சிறு-நிலவு’ 2024

September 22 , 2024 62 days 135 0
  • பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க முடியாத குறுங்கோள் ஆனது சிறு நிலவு எனப் படுகிறது.
  • செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை குறுகிய காலத்திற்கு பூமி ஒரு புதிய சிறு நிலவைக் கொண்டிருக்கும்.
  • 2024 PT5 என்று பெயரிடப்பட்ட அண்டவெளியில் பயணிக்கிற அந்த குறுங்கோள் வெறும் 33 அடி நீளம் கொண்டது.
  • இது மிக விரைவில் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஒரு ஒற்றைச் சுற்றுப் பாதைக்குள் ஈரக்கப்படும்.
  • இந்த 2024 PT5 ஆனது பூமியைச் சுற்றி ஒரு முழு சுழற்சியினை நிறைவு செய்யாது என்பதால் அறிவியல் ரீதியாக ஒரு சிறிய நிலவு அல்ல.
  • இது 56 நாட்களுக்கு மட்டுமே புவியின் சுற்றுப்பாதையில் இருக்கும்.
  • இது பூமி மற்றும் சூரியனைச் சுற்றியுள்ள வடிவத்தின் காரணமாக "குதிரை லாட வடிவமைப்பு கொண்ட சுற்றுப்பாதைகள்" எனப்படும் பாதைகளைப் பின்பற்றும்.
  • 2024 PT5 குறுங்கோள் ஆனது, ஆகஸ்ட் மாதத்தில் குறுங்கோள் நிலப்பரப்பு-மோதல் எச்சரிக்கை அமைப்பு மூலம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • முன்னதாக 2006 ஆம் ஆண்டில், ஒரு குறுங்கோள் பூமியைச் சுற்றி சுமார் ஓராண்டு காலத்திற்குச் சுற்றி வந்தது என்ற நிலையில் மற்றொன்று 2020 ஆம் ஆண்டில் புவியின் சுற்றுப்பாதையினை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பல ஆண்டுகள் பூமியைச் சுற்றி வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்