உலக மனநல தின விழாவின் போது (அக்டோபர் 10) ஐக்கியப் பேரரசு உலகின் முதல் தற்கொலைத் தடுப்பிற்கான அமைச்சரை நியமித்திருக்கின்றது.
பிரிட்டினின் பிரதமரான தெரசா மே பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜாக்கி டொய்லே பிரைஸ் என்பவரை (தற்போதைய சுகாதார அமைச்சர்) தற்கொலைத் தடுப்பிற்கான அமைச்சராக நியமித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, தற்கொலை என்பது உலகளவில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட இளையோர்களின் மரணத்திற்கான இரண்டாவது காரணமாக குறைந்தபட்சம் ஒவ்வொரு 40 மரணங்களுக்கும் ஒன்று என்ற வீகிதத்தில் உள்ளது.