TNPSC Thervupettagam

தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா

August 5 , 2018 2179 days 653 0
  • மோசடி செய்துவிட்டு சட்ட நடைமுறையிலிருந்து தப்பிப்பதற்காக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் மோசடியாளர்களை தடுப்பதற்கான தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • பொருளாதார குற்றத் தடுப்பு என்பது எந்தவொரு தனிநபரும் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் பொருளாதார மோசடியில் ஈடுபட்டு குற்றவியல் நடைமுறையிலிருந்து தப்பிப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறுவோரை கைது செய்வதாகும்.
  • இப்புதிய சட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமானது ஒரு நபரை தலைமறைவு நிதி மோசடியாளர்கள் என்று அறிவிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. மேலும் இந்த நீதிமன்றம் பினாமியின் சொத்துகள் உள்பட இவ்வாறு அறிவிக்கப்பட்ட நபரின் சொத்துகளை இச்சட்டத்தின் மூலம் பறிமுதல் செய்ய முடியும்.
  • தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா – 2018 (Fugitive Economic Offenders Bill, 2018) ஆனது, மாநிலங்களவையில் ஜூலை 25 அன்று நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மக்களவையில் ஜூலை 19 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் குடியரசுத் தலைவர் பின்வரும் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார் :
    • மாற்றுமுறை ஆவணங்கள் (திருத்தம்) சட்டம், 2018
    • அரசு வங்கிகள் (நீக்குதல் மற்றும் திருத்தம்) சட்டம், 2018
    • குறிப்பிட்ட நிவாரணச் (திருத்தம்) சட்டம், 2018.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்