இந்த அறிக்கையானது சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப் பட்டது.
இது தற்போதைய விநியோகச் சங்கிலி மாற்றங்களால் அதிகம் பயனடையக் கூடிய நாடுகளை அடையாளம் காட்டுகிறது.
இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, மெக்சிகோ, துருக்கி மற்றும் போலந்து ஆகியவை ஒரு குறிப்பிடத் தக்க பலன்களைப் பெறக்கூடிய நாடுகளின் சில பட்டியல்களில் இடம் பெற்றுள்ளன.
45% தலைமைப் பொருளாதார வல்லுநர்கள் 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய மந்தநிலை ஏற்படக் கூடும் என்று கருதுகின்றனர், ஆனால் அதே சமயம் அதே அளவு சதவீதத்தினர் அது சாத்தியமில்லை என்றும் கருதுகின்றனர்.