TNPSC Thervupettagam

தலைவர்களின் பிறந்தநாள் அரசு விழா கொண்டாட்டம்

June 29 , 2024 16 hrs 0 min 71 0
  • பின்வரும் தலைவர்கள்/ முக்கியப் பிரமுகர்களின் பிறந்தநாளை ஒவ்வோர் ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 07.
  • சுதந்திரப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 01.
  • சுதந்திரப் போராட்ட வீரர் இம்மானுவேல் சேகர் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 09.
  • அல்லாலா இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான தை 01 ஆம் தேதி.
  • சுதந்திரப் போராட்ட வீரர் K.M. அண்ணல் தங்கோ அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 13.
  • சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பா.சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 11.
  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதி.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளான ஜூலை 07 ஆம் தேதி.
  • M.K. தியாகராஜ பாகவதர் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 01 ஆம் தேதி.
  • ‘நீதிக்கட்சியின் வைரத்தூண்’ என்று அழைக்கப்படும் சர் A.T. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 01 ஆம் தேதி.
  • தமிழறிஞர் முனைவர் மு. வரதராசனார் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 25 ஆம் தேதி.
  • எழுத்தாளர் கி. இராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 19 ஆம் தேதி.
  • செங்கல்பட்டு, கடலூர், இராமநாதபுரம், நாமக்கல், வேலூர், சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, இராணிப் பேட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அந்தந்த முக்கியத் தலைவர்களின் ஊர்களில் அவர்களின் பிறந்த நாளானது அரசு விழாக்களாகக் கொண்டாடப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்