TNPSC Thervupettagam

தளர்த்தப்பட்ட பணம் அனுப்பும் திட்டம்

May 8 , 2018 2394 days 798 0
  • இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்திற்காக (Liberalised Remittance Scheme - LRS) அறிக்கையிடல் வரைமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் ஆண்டிற்கு 2,50,000 அமெரிக்க டாலர் வரை மட்டுமே வெளிநாட்டிற்கு பணத்தை அனுப்ப முடியும். வரைமுறைகளை கடுமையாக்கியதின் நோக்கமானது கண்காணித்தலை மேம்படுத்துதல் மற்றும் தளர்த்தப்பட்ட பணம் அனுப்பும் திட்ட வரம்புகளின் இணக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவை ஆகும்.
  • தளர்த்தப்பட்ட பணம் அனுப்பும் திட்டம் ஆனது, நடப்பு மற்றும் மூலதன கணக்கு நோக்கங்களுக்காக / இரண்டு கணக்குகளும் சேர்ந்த நோக்கங்களுக்காக, சிறார்களை உள்ளடக்கிய (Minors) அனைத்து தனிநபர்களும் குறிப்பிட்ட தொகையை அமெரிக்க டாலர்களில் இலவசமாக அனுப்பலாம். 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வரைமுறைகளானது, 1999 ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (Foreign Exchange Management Act – FEMA) கீழ் ஏற்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்