உலக வங்கியின் 2023 ஆம் ஆண்டு தளவாட செயல்திறன் குறியீட்டில் (LPI) இந்தியா ஆறு இடங்கள் முன்னேறியுள்ளது.
இப்போது இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ள 139 நாடுகளில் இந்தியா 38வது இடத்தில் உள்ளது.
2018 ஆம் ஆண்டு இந்தக் குறியீட்டில் 44வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 38வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் செயல்திறனானது 2014 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 54வது இடத்தில் இருந்த நிலையில் இருந்து தற்போது வெகுவாக மேம்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் 52வது இடத்திலிருந்த இந்தியாவின் தரவரிசையானது, தற்போது உள் கட்டமைப்பு மதிப்பில் ஐந்து இடங்கள் முன்னேறி 2023 ஆம் ஆண்டில் 47வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டில் சர்வதேச ஏற்றுமதிகளில் 44வது இடத்திலிருந்த இந்தியா 2023 ஆம் ஆண்டில் 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளதோடு, தற்போது தளவாடத் திறன் மற்றும் சமத்துவத்தில் நான்கு இடங்கள் முன்னேறி 48வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான வர்த்தக கொள்கலன்களின் சராசரி நிலுவை நேரம் மூன்று நாட்களாகும்.
அமெரிக்காவிற்கான நிலுவை நேரம் ஏழு நாட்கள் மற்றும் ஜெர்மனிக்கான நிலுவை நேரம் 10 நாட்கள் ஆகும்.