மத்திய நிதி அமைச்சகமானது தளவாடத் துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்தை (Infrastructure status) வழங்கியுள்ளது.
தளவாடத் துறையின் உள்கட்டமைப்பானது பின்வருபவற்றை உள்ளடக்கியது,
கிடங்கு வசதிகள் (Warehousing Facility)
குளிர்பதன சங்கிலி-தொடர் வசதிகள் (Cold Chain Facility).
உள்நாட்டு கொள்கலன் நிலையத்தை உள்ளடக்கிய பல்-மாதிரி தளவாட பூங்கா
உள்கட்டமைப்பு அந்தஸ்திற்கான பரிந்துரை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தால் அளிக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சகம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதால் தளவாடத் துறையில் உண்டாகும் தாக்கங்கள் பின்வருமாறு,
உற்பத்தி துறையை ஒப்பிடும் போது நீண்ட கால முதிர்வுடைய கடன்களை (Long term Maturity loan) பெற இயலும்.
கடன்கள் பெற விண்ணப்பித்தலின் போது சற்று அதிக சம பங்கு விகிதங்களை (equity ratio) பெற தகுதி பெறும்.
வெளிப்புற வணிக கடனுக்கு (External Commercial Borrowing) விண்ணப்பிக்கும் போது சில நன்மைகள் மற்றும் நெகிழ்வுத் தன்மைகளைப் பெறும்.
IDFC, IIFCL போன்ற சிறப்பு தனித்துறை கடன் வழங்கிகளிடம் மறு நிதியாக்கத்தை (Refinancing) செய்ய அனுமதிக்கப் பெறும்.
மேலும் தளவாடப் போக்குவரத்து மற்றும் கிடங்குகளின் மூலதன செலவை குறைக்கவும், அவற்றின் செயற்தன்மையை அதிகரிக்கவும் இந்த அந்தஸ்து உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றால் தளவாடங்களின் விலை குறையும்.
2017ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் தளவாட செயல்திறன் குறியீட்டில் (Logistics performance Index) இந்தியாவின் தளவாட செயல்திறன் 54வது இடத்திலிருந்து 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தளவாடத் துறையின் வளர்ச்சியானது நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை ஊக்குவிக்கும். அதனால் வேலைவாய்ப்பு உருவாக்கமும், உற்பத்தித் துறையும் ஊக்கம் பெறும். இது நாட்டின் GDP-யை அதிகரிக்க கருவியாக அமையும்.