March 15 , 2019
2084 days
688
- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் “நட்சத்திரக் குள்ளத் தவளை” என்ற ஒரு புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இது ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கேரளாவின் குறிச்சியார் மலையில் கண்டறியப்பட்டுள்ளது.
- இது ஒரு அங்குலம் நீளமுடையது. மேலும் இதன் பின்புறத்தில் நட்சத்திரம் போன்ற புள்ளிகள் அமைந்துள்ளன.
- இது ஒரு தனித்துவம் வாய்ந்த தவளையாகும். மேலும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இது எந்தவொரு தவளை இனத்துடனும் நெருங்கிய தொடர்பில் இல்லை.
Post Views:
688