இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் காணப்படும் ஒரு தவளையின் உடலின் பக்கவாட்டில் வளரும் காளான் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஓர் உயிரியில் இருந்து காளான் வளர்வதைக் கண்டறிவது இதுவே முதல் முறையாகும்.
இது கர்நாடகாவின் கர்காலாவின் மாலாவில் உள்ள குத்ரேமுகா மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள மழைநீர் தேங்கும் குளத்தில் "ராவ் தங்க முதுகு தவளைகளில்" இது வளர்வது கண்டறியப்பட்டது.
இந்த காளான் வகையானது (சிப்பி) போனட் காளான் என அடையாளம் காணப்பட்டது. இது பொதுவாக பட்டுப்போன மற்றும் சிதையும் மரங்களில் வளரும்.
ஒட்டுண்ணிகள் வகையிலான, "கருப்பு பூஞ்சை" என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோசிஸ் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய சில வகைகளும் உள்ளன.