TNPSC Thervupettagam

தஸ்தக் பிரச்சாரம்

February 9 , 2018 2511 days 845 0
  • உத்தரப்பிரதேச மாநில அரசானது யுனிசெப் (United Nations Children’s Emergency Fund-UNICEF) அமைப்புடன் இணைந்து தஸ்தக் (Dastak) எனும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
  • மாநிலத்தில் உள்ள உயிர்க்கொல்லி நோய்களான ஜப்பான் மூளைக் காய்ச்சல் (Japanese Encephalitis -JE) மற்றும் கடின மூளை வீக்க குறைபாடு (Acute Encephalitis -AE) போன்றவற்றை முழுவதும் ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் வீடுவாரியான பிரச்சாரமே (door to door campaign) தஸ்தக் (Dastak) ஆகும்.
  • இந்த தஸ்தக் பிரச்சாரத்தின் முழக்கம் (tagline)- “Darwaja Khatkhatao AES aur JE Ko bhagao”
  • இந்த பிரச்சாரமானது உத்தரப்பிரதேச மாநிலத்தின் 38 JE மற்றும் AE பாதிப்புள்ள மாவட்டங்களில் வீடு வாரியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
  • உத்திரப்பிரதேச மாநிலத்தில் JE மற்றும் AE பாதிப்புடைய பகுதிகளானது பெரும்பாலும் நேபாள நாட்டுடன் ஒட்டி அமைந்துள்ள உத்திரப்பிரதேசத்தின் தராய் (Tarai Region) பகுதிகளிலேயே உள்ளது.
  • இப்பகுதியானது நாட்டின் ஒட்டு மொத்த AE சுமையில் 60 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்