இந்த வாரம் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட தஹவ்வூர் ஹுசைன் ராணாவின் விசாரணைக்கு இந்தியா தயாராகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டின் வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டவரான ராணா, முன்பு பாகிஸ்தான் இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர் ஆவார்.
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதில் ஈடுபட்டதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அமெரிக்காவில் நடைபெற்ற விசாரணையில் மும்பை தாக்குதல்களில் ராணா ஈடுபட வில்லை என்று கூறி அவர் குற்றவாளி அல்ல என்று கூறப்பட்டாலும், LeT என்ற அமைப்பு உடனான அவரது தொடர்புகள் மற்றும் கோபன்ஹேகன் சதியில் ஈடுபட்டதற்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
2013 ஆம் ஆண்டில், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் 2020 ஆம் ஆண்டில் உடல்நலக் கோளாறுகள் காரணங்களுக்காக விடுவிக்கப் பட்டார்.
இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கைக்குப் பிறகு அதே ஆண்டின் பிற்பகுதியில் அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார்.