TNPSC Thervupettagam

தாஜ்மகால் – 2 வது இடம்

December 7 , 2017 2543 days 926 0
  • ஆக்ராவில் அமைந்துள்ள இந்தியாவின் புராதன வெள்ளைப் பளிங்குச் சின்னமான தாஜ்மகால் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • “டிரிப் அட்வைஸர்” [Trip Adviser] என்னும் ஆன்லைன் சுற்றுலா இணையதளம், உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளிடம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்  மதிப்பீட்டின் அடிப்படையில் யுனெஸ்கோவின் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்களை வரிசைப்படுத்தியது.
  • இதில் கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் முதலிடத்தைப் பிடித்தது.
  • இந்தியாவின் தாஜ்மகால் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • சீனப் பெருஞ்சுவர் மற்றும் பெரு நாட்டின் மச்சு பிச்சு ஆகியவை முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • இத்தாலியின் சஸ்ஸி ஆப் மட்டேரா, இஸ்ரேலில் உள்ள பழைய ஜெருசலேம், துருக்கியின் இஸ்தான்புல் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்