மணிப்பூரில் நிலவும் இன நெருக்கடிக்கு மத்தியில் அந்தப் பழங்குடியினரின் பெரும் தனித்துவமான அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்காக தாடூ என்ற பழங்குடியினர் 10 அம்சப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
அசாம், மிசோரம் மற்றும் நாகாலாந்தில் உள்ள தாடூ பழங்குடியினரை ஒரு தனி மற்றும் தனித்துவமானப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க தாடூ மாநாடு ஒப்புக் கொண்டது.
இந்தப் பிரகடனத்தின்படி, தாடூ என்பது குக்கி இனமல்ல அல்லது குக்கி இனத்திற்கு உட்பட்டதுமல்ல, அல்லது குக்கியின் ஒரு பகுதியும் அல்ல, ஆனால் குக்கி இனத்தில் இருந்து அது முற்றிலும் தனிப்பட்டது மற்றும் சுதந்திரமானதாகும்.
தாடூ இனத்தவர் இந்தியாவின் மணிப்பூரின் 29 பூர்வீக/பூர்வீகப் பழங்குடியினங்களில் ஒன்றாவர்.
1881 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இருந்து 2011 ஆம் ஆண்டின் சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரையில் மணிப்பூரில் சுமார் 2,15,913 தாடூ சமூகத்தினர் இருப்பதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளதையடுத்து, மணிப்பூரில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பழங்குடியினராக இந்த இனமானது திகழ்ந்து வருகிறது.
எனி இன குக்கி பழங்குடியினர் (AKT) 2011 ஆம் ஆண்டின் சமீபத்திய மணிப்பூர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சுமார் 28,342 எண்ணிக்கையினைக் கொண்டிருந்தனர் என்ற நிலையில் குக்கி இனம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப் பட்டு உள்ளது இது முதன்முறையாகும்.