FSSAI ஆனது குடுவையிடப்பட்ட குடிநீர் மற்றும் தாதுக்கள் மிக ஏற்றப்பட்ட நீரை அதிக ஆபத்துள்ள உணவு வகையாக மறுவகைப்படுத்தியுள்ளது.
இது பெருமளவு கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளின் வருடாந்திர ஆய்வுகளைக் கட்டாயமாக்குகிறது.
FSSAI அமைப்பின் மறுவகைப்படுத்தல் ஆனது, 2011 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை மீதான பெரும் தடை மற்றும் கட்டுப்பாடுகள்) ஒழுங்கு முறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.