நோய் தொற்றைத் (Infection) தடுப்பதற்கும் அனைத்து மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் (All clinical purposes) தானாக முடங்கிடவல்ல மருத்துவ ஊசிகளைப் (Auto-disable syringes) பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவாகியுள்ளது.
இந்த முடிவை ஆந்திரப் பிரதேச மாநில அரசானது ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படகின்ற உலக கல்லீரல் அழற்சி தினத்தன்று (World Hepatitis Day) அமல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
நோய் தொற்று பரவல் சுழற்சியை முறிப்பதன் மூலம் நோய் தொற்று சுமையை குறைப்பதற்கும், தொற்று பரவல் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் இந்த முயற்சி உதவும்.