பள்ளிகளில் பாக்டீரியா முற்றிலும் நீக்கப்பட்ட இலவசக் குடிநீரை வழங்குவதற்காக மேற்கு வங்க மாநில அரசானது தானியங்கித் தண்ணீர் இயந்திரத் (Water ATM) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க அரசானது அனைத்து நகரங்களிலும், புறநகர் பகுதிகளிலும் தானியங்கித் தண்ணீர் இயந்திரங்களை அமைத்து வருகின்றது.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவையாகும்.
இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் ஏழு மாவட்டங்களினுடைய 90 மண்டலங்களில் அபாயகர நிலையில் இருந்த நீரின் ஆர்சனிக் கலப்பு வீதம், தற்போது 61 சதவீதமாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கி போன்றவற்றின் உதவியுடன் இந்தப் புதுமையான சோதனைத் திட்டம் சாத்தியப் படுத்தப்பட்டுள்ளது.