TNPSC Thervupettagam

தானியங்கி வென்டிலேட்டர்கள்

April 5 , 2020 1570 days 569 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் விப்ரோ 3D அமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து தானியங்கி சுவாசக் கருவிகளின் (வென்டிலேட்டர்கள்) முன்மாதிரிகளை உருவாக்க உள்ளன.
  • கோவிட் -19 நெருக்கடியின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த வென்டிலேட்டர்கள் உதவும்.
  • வென்டிலேட்டர்கள் கையால் இயக்கப்படும் செயற்கையான சுவாசக் கருவிகள் (AMBU - Artificial Manual Breathing Unit) என்று அழைக்கப் படுகின்றது. 
  • சுவாசிக்காத அல்லது சுவாசிப்பதில் தீவிர சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு கையால் பிடித்து இயக்கக் கூடிய இந்தச் சாதனமானது, தானியங்கி முறையில் அழுத்தப்பட்ட சுவாசத்தை வழங்கும்.
  • AMBU ஒரு கையடக்கச் சாதனமானதால், இரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவப் படுக்கைகளுக்கு ஏற்றதாக அது இருக்கும்.
  • மேலும் இது அழுத்தத்தைத் தக்க வைக்க நேர்மறையான வெளிசுவாச அழுத்தத்தை (PEEP - positive end expiratory pressure) அதில் ஒரு கூடுதல் அங்கமாகச் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்