டிஜிட்டல் இந்தியா, ஆதார், டிஜிட்டல் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியத் திட்டங்களை திறம்பட கண்காணிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology - MeitY) தானியங்கு நிகழ்நேர செயல்திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட் பலகையை வெளியிட்டது.
இந்த ஸ்மார்ட் பலகையின் செயல்திறன் மத்திய அரசு, மாநில அரசு அல்லது மாவட்ட நிர்வாகங்களுக்கு MeitY ஆல் செயல்படுத்தப்படும் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஒற்றைச் சாளர அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட் பலகையானது ஒரு புதிய டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிகழ்வின் போது, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கலை நிறுவலான 'டிஜிட்டல் ராட்டையையும்' வெளியிட்டார்.
டிஜிட்டல் சர்க்கா என்பது டிஜிட்டல் சுழல் என்ற அமைப்புடன் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்ட ஒரு கலவையாகும்.