TNPSC Thervupettagam

தானியங்கு மழைமானி @ 1300 இடங்களில்

September 13 , 2019 1956 days 822 0
  • தொலையளவியல் தானியங்கு மழைமானிகள், தானியங்கு வானிலை நிலையங்கள், தானியங்கு நீர் மட்டப் பதிவாக்கிகள் ஆகியவற்றை அமைக்க அரசாங்கம் ஒரு ஆலோசகரை நியமித்துள்ளது.
  • அவை தமிழ்நாட்டின் வருவாய் துணை மண்டலங்கள் மற்றும் வட்டாரங்களில் உள்ள சுமார் 1,300 இடங்களில் அமைக்கப் படவிருக்கின்றன.
  • நம்பகமான தரவைப் பெறுவதற்கு ஒரு விரிவான நிகழ்நேர நீர்/வானிலை தரவு சேகரிப்பு முறையைப் பல்வேறு கட்டங்களாக உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
  • அதிக மழை அளவு அல்லது வறட்சியை நிர்வகிக்க இந்தத் தரவு பயன்படுத்தப்படும்.
  • தற்போது, சுமார் 470 மழைமானிகள் வருவாய்த் துறை, வேளாண்மை, பொதுப் பணித் துறை மற்றும் வானிலை ஆய்வுத் துறை ஆகியவை மூலம் மாவட்ட தலைமையகத்தில் கிடைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்