தான்சானியா – 2024 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம்
April 21 , 2025 5 days 44 0
தான்சானியாவில், இரவு நேர வெப்பநிலையானது தீவிரமாக உயர்ந்ததுடன், 2024 ஆம் ஆண்டானது இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.
இரவு நேர வெப்பத்தின் முக்கியக் குறிகாட்டியாக உள்ள நாட்டின் சராசரி வருடாந்திர குறைந்தபட்ச வெப்பநிலையானது, சுமார் 19.3°C அளவினை எட்டியது என்பதோடு இது நீண்ட கால சராசரியை விட 1.1°C அதிகமாகும்.
இந்த அதிகரிப்பு ஆனது, சராசரியை விட 0.4°C மட்டுமே அதிகமாக உள்ள அதிகபட்ச வெப்பநிலையில் பதிவான அதிகரிப்பை விட அதிகமாக இருந்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையானது சராசரியை விட 0°C முதல் 1°C வரை அதிகமாக இருந்தது.
2024 ஆம் ஆண்டிற்கான தேசிய சராசரி வெப்பநிலையானது 24.3°C என்ற அளவினை எட்டியது என்பதோடு இது இயல்பை விட 0.7°C அதிகமாகும்.
இது 2023 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய பதிவினை விட விஞ்சியது என்பதோடு இது 1970 ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.
மொத்த மழைப்பொழிவு ஆனது சராசரியை விட 1,307.6 மில்லி மீட்டர், 285.2 மில்லி மீட்டர் (28 சதவீதம்) அதிகமாக பதிவானதுடன், இந்த ஆண்டு ஆனது, தான்சானியாவின் 1970 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில், நான்காவது மிக அதிகம் மழைப்பொழிவு பதிவான ஆண்டாகவும் மற்றும் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகம் மழைப்பொழிவு பதிவான ஆண்டாகவும் உள்ளது.