தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற போட்டியில் 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சீனா 2018 ஆம் ஆண்டிற்கான தாமஸ் கோப்பையை வென்றுள்ளது. பத்தாவது முறையாக இக்கோப்பையைச் சீனா வென்றுள்ளது.
தாமஸ் கோப்பையானது சில வேளைகளில் உலக ஆண்களுக்கான குழு சாம்பியன்ஷிப் போட்டி என்றும் அழைக்கப்படுகின்றது. இது ஓர் சர்வதேச பாட்மிண்டன் போட்டியாகும்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 1982 ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டி நடத்தப்படுகிறது.
இதற்குமுன் இப்போட்டியானது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது.
1948-49 ஆம் ஆண்டில் இப்போட்டி முதன்முதலாக நடத்தப்பட்டது.