உலக வங்கியின் இடப்பெயர்வு மற்றும் வளர்ச்சி என்ற அறிக்கையின் 2019 ஆம் ஆண்டின் பதிப்பின் படி, வெளிநாட்டில் வாழும் நபர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்ற நாடுகளில் உலகின் முன்னணி நாடாக இந்தியா தன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 79 பில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர்.
வங்கிகள் மூலம் தாய்நாட்டிற்குப் பணத்தைத் திருப்பி அனுப்பும் வழிகளில் வங்கிகள் மூலமான வழி மிகவும் செலவு மிக்கதாக விளங்குகிறது. இதற்கு வங்கிகள் சராசரியாக 11 சதவிகிதத்தைக் கட்டணமாக வசூலிக்கின்றன.