சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தாய்க்குரிய நோய்த் தடுப்பாற்றல் பகுப்பாய்வு இயந்திரம் மற்றும் மாநில உடல்நல மன்றத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது மருத்துவமனையில் முதன்மை உடல்நலப்பரிசோதனை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
இதன் மூலம் 11-14 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, அவர்கள் சுமக்கும் கருவில் மரபணுக் குறைபாடுகள் எதுவும் உள்ளதா எனப் பரிசோதிக்க முடியும்.
பின்னர், தாய்மார்களும் அவர்களது குடும்பத்தினரும் கர்ப்பம் தரிக்க வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்.
இயல்பிற்கு முரணாகப் பிறக்கும் குழந்தைகளை இது தடுக்க உதவும்.