TNPSC Thervupettagam

தாய்ப்பால் மற்றும் சுற்றுச்சூழல்

May 29 , 2024 179 days 228 0
  • வணிக பால் வகை கூறுகளை கொண்ட உணவு உற்பத்தியானது சுமார் 11-14 கிலோ கிராம் அளவிலான பசுமை இல்ல வாயு உமிழ்வினை (முட்டை, கோழி மற்றும் காய் கறிகளை விட அதிகமாக) உருவாக்குகிறது.
  • இது அதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுச் சுழற்சியில் 5,000 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகிறது.
  • இதற்கு நேர்மாறாக, தாய்ப்பால் பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கதாகவும், குறைந்த கார்பன் தடத்தினைக் கொண்டுள்ளதாகவும், நல்வாழ்விற்கு என்று மிகவும் அவசியமானதாகவும் உள்ளது.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உலகின் பாதி எண்ணிக்கையிலான பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கின்றனர்.
  • இருப்பினும், எந்தவொரு நாடும் இந்த பராமரிப்புப் பணியை அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் அல்லது தேசிய வரவு செலவுத் திட்டங்களில் கணக்கிடுவதில்லை.
  • ஆறு மாதங்களுக்குப் பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுப்பதால் ஒவ்வொரு குழந்தைக்கும் 95-153 கிலோவிற்கு சமமான CO2 உமிழ்வு குறைக்கப்படுகிறது.
  • பால் பொடிகளின் சராசரி நீர் உள்ளடக்கம் ஆனது தோராயமாக 4700 லிட்டர்/கிலோ6 (கிட்டத்தட்ட 140 குளியலுக்கு தேவையான நீருக்குச் சமம்).
  • இந்தியாவில் பாலிற்கான மாற்றுப் பொருள் சந்தையானது 2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 18.19% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்