TNPSC Thervupettagam

தாய்லாந்திற்கு பிரம்மோஸ் கடல் ஏவுகணைகள்

August 5 , 2019 1940 days 712 0
  • பிரம்மோஸ் மீயொலி ஏவுகணைகளை  வாங்குவது தொடர்பாக தாய்லாந்து இந்தியாவுடன் அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.
  • அநேகமாக பிரம்மோஸ் மீயொலி ஏவுகணைகளைப் பிற நாட்டிற்கு விற்கப்படும் முதல் விற்பனையாக இது இருக்கும்.
  • தாய்லாந்து அதன் டார்னியர் கடலோரப் பாதுகாப்பு விமானத் தாங்கி கப்பலை சீரமைக்கவும் புதுப்பிக்கவும் ஒரு வேண்டுகோளையும் இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது.
  • தாய்லாந்தை இந்தியாவின் கடலோரக் கண்காணிப்பு ரேடார் சங்கிலி வளையத்திற்குள் ஒருங்கிணைத்திட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
  • 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் சாங்ரி லா மாநாட்டில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்தியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் முத்தரப்பு கடற்படைப் பயிற்சி இவ்வருடத்தின் இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கின்றது.
  • இந்தியா இவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் இதன் முதல் பதிப்பை நடத்த இருக்கின்றது.
  • இரு நாட்டுக் கடற்படைகளும் ஏற்கெனவே ஒரு ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் மேற்கொள்கின்றன. ஒரு புதிய இருதரப்புப் பயிற்சியும் அந்த முத்தரப்புப் பயிற்சியல்லாமல் நடைமுறையில் இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்