TNPSC Thervupettagam

தாய்லாந்து அரசரின் முடிசூட்டு விழா

May 5 , 2019 1902 days 760 0
  • “மிகப்பெரும் வெற்றிக்கான மகுடம்” என்ற பட்டத்துடன் தாய்லாந்து நாட்டின் புதிய அரசராக மகா வஜ்ஜிரலாங்கோர்ன் என்பவருக்கு தாய்லாந்து அதிகாரப் பூர்வமாக முடிசூட்டியது.
  • இவர் 1972 ஆம் ஆண்டில் இளவரசராகவும் அரசரின் அதிகாரப்பூர்வ வாரிசாகவும் ஆனார்.
  • தற்பொழுது இவர் “தாய்லாந்தின் பத்தாவது ராம அரசர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • 1782 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் சக்ரி வம்சம் ஆட்சி செய்து வருகின்றது.
  • சக்ரி வம்சத்தின் 10-வது அரசர் இவராவார்.
  • தாய்லாந்து அரசியலமைப்பு சார்ந்த முடியரசைக் கொண்டிருக்கின்றது.
  • இதற்கு முன்பு 1950 ஆம் ஆண்டு இந்த அரசரின் தந்தையான பூமிபோல் அதுல்யாதேஜ் என்பவருக்கு முடிசூட்டு விழா கடைசியாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்