TNPSC Thervupettagam

தாய்வழி காசநோயை முடிவுக்குக் கொண்டுவர WHO அமைப்பின் செயல் திட்டம் 2023

November 21 , 2023 370 days 256 0
  • உலக சுகாதார அமைப்பானது, குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதன் திருத்தியமைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு செயல் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
  • இந்த செயல் திட்டம் ஆனது, 2027 ஆம் ஆண்டிற்குள் காசநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள 90 சதவீத மக்களுக்கு தடுப்பு சிகிச்சைக்கான அணுகலை வழங்குமாறு உலக நாடுகளை வலியுறுத்துகிறது.
  • காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் 2027 ஆம் ஆண்டிற்குள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
  • இது 2023 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 45 மில்லியன் மக்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையை வழங்குவதாகும்.
  • இதில் 4.5 மில்லியன் பேர் குழந்தைகள் மற்றும் 1.5 மில்லியன் பேர் மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
  • பல்மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய் (MDR-TB) மற்றும் ரிஃபாம்பிசின்-எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய் (RR-TB) பாதிப்பு உள்ள 115,000 குழந்தைகள் மற்றும் இளம் பருவ வயதினருக்கு சிகிச்சை அளிப்பதற்கான இலக்கில் 19 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான 1.3 மில்லியன் காசநோய் உயிரிழப்புகளில், 214,000 பேர் 14 வயது மற்றும் அதற்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர் .
  • காசநோய் சிகிச்சையை அணுக இயலாத குழந்தைகள் மத்தியில் தான் 96 சதவீத உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்