TNPSC Thervupettagam
February 21 , 2020 1619 days 672 0
  • முகலாய இளவரசரான தாரா ஷிக்கோவின் கல்லறையைக் கண்டுபிடிப்பதற்காக சமீபத்தில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகமானது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த (Archaeological Survey of India - ASI) ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • தாரா ஷிக்கோ (1615-59) என்பவர் முகலாயப் பேரரசரான ஷாஜகானின் மூத்த மகனும் வாரிசும் ஆவார்.
  • இவர், இவரது தம்பியான இளவரசர் முஹியுதீன் (பின்னர் பேரரசர் ஔரங்கசீப்) என்பவரால் தோற்கடிக்கப் பட்டார்.
  • தாரா ஷிக்கோ ஒரு "தாராளவாத முஸ்லீம்" என்று விவரிக்கப்படுகின்றார். இவர் இந்து மற்றும் இஸ்லாமிய மரபுகளுக்கு இடையில் இருக்கும் பொதுவான தன்மைகளைக் கண்டறிய முயன்றார்.
  • இவர் பகவத் கீதை மற்றும் 52 உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்