இந்தியாவில் உள்ள தார் பாலைவனத்தின் பசுமையாக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 38 சதவீத உயர்வுப் பதிவாகியுள்ளது.
பருவமழை மற்றும் வேளாண் விரிவாக்கத்தில் பதிவான குறிப்பிடத்தக்க அதிகரிப்பே இதற்குக் காரணமாகும்.
நிலத்தடி நீர் வளங்களும் தார் பாலைவனத்தின் தாவர வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளன.
கடந்த சில தசாப்தங்களில் மக்கள் தொகை, மழைப்பொழிவு மற்றும் தாவரங்களில் ஒரே நேரத்தில் அதிகரிப்பு பதிவான உலகின் ஒரே பாலைவனம் தார் பாலைவனம் ஆகும்.
தார் பாலைவனப் பகுதியானது, உலகின் மிக அதிகமான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பாலைவனத்தைக் கொண்டுள்ளது.
இது வடமேற்கு இந்தியா (இராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா) மற்றும் தென்கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் 200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி உள்ளது.
2001 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பாலைவனத்தில் பதிவான மழைப் பொழிவு 64 சதவீதம் அதிகரித்துள்ளது.
1985 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் தார் பாலைவனத்தில் நகர்ப்புறங்களில் 50 சதவீதம் முதல் 800 சதவீதம் வரை அதிகரிப்பு என்பது பதிவானது.