TNPSC Thervupettagam

தால்ஸ் தரவு அச்சுறுத்தல் அறிக்கை 2023

April 23 , 2023 582 days 269 0
  • இது இணையவெளிப் பாதுகாப்புப் போக்குகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய ஒரு விரிவானப் பகுப்பாய்வு ஆகும்.
  • இந்தியாவில், பாதிக்கும் மேற்பட்ட (52%) தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த ஒரு வருடத்தில் பணய தீநிரல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  • இது உலக அளவிலான பணய தீநிரல் தாக்குதல்களான 48 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
  • இந்தியாவில் இந்த மதிப்பாய்வில் பங்கேற்ற 53% பேர், தங்கள் இணைய உலக இணைப்பு சாதனங்கள் தான் இந்தத் தாக்குதல்களுக்கான மிகப்பெரிய இலக்கு என்று கூறியுள்ளனர்.
  • அதைத் தொடர்ந்து மேகக் கணிமம் அடிப்படையிலான சேமிப்பகம் (41%) மற்றும் மேகக் கணிமம் சார்ந்த சேவை பெற்ற செயலிகள் (SaaS) (40%) ஆகியவை இலக்காக உள்ளன.
  • இந்தியாவில் இந்த மதிப்பாய்வில் பங்கேற்ற 82 சதவீதம் பேர் பல்வேறு பணய தீநிரல் தாக்குதல்களால் தரவு இழப்பினைச் சந்தித்து உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், இது உலகளவில் 67 சதவீதமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்