- ஆய்வக அறிக்கையானது, 2018 ஆம் ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடப் படும்போது தற்பொழுது தாளடி எரிப்பு நிகழ்வுகளில் 12% குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.
- 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களில் தாளடி எரிப்பு நிகழ்வுகள் மேற்கொள்ளப் பட்டன.
- "பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் தில்லியின் தேசியத் தலைநகர்ப் பகுதி ஆகிய இடங்களில் பயிர்க் கழிவுகளை நிர்வகிப்பதற்கான வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல்" என்ற மத்திய அரசின் திட்டமே இந்தத் குறைந்த அளவிலான தாளடி எரிப்பு நிகழ்விற்கு ஒரு முக்கியக் காரணம் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
- இந்த மூன்று மாநிலங்களில் எரிக்கப் படும் தாளடி எரிப்பு காரணமாக புது தில்லி மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது.
- தில்லியை அடையும் தாளடி எரிப்புப் புகையானது மேற்கத்திய இடையூறுகளால் பெரிதும் தாக்கம் பெறுகின்றது.
- சமீபத்தில், சென்னையைச் சேர்ந்த எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அமைப்பானது மியான்மரின் நய்பைதவ் என்ற இடத்தில் ஒரு அரிசி உயிரிப் பூங்காவை நிறுவியுள்ளது. இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப் பட்டுள்ளது. இந்தப் பூங்கா இந்தியக் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப் பட்டது.
- காகிதம், அட்டை மற்றும் விலங்குத் தீவனம் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பதற்குத் தாளடிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த அரிசி உயிரிப் பூங்கா எடுத்துரைக்கின்றது.
எம்.எஸ். சுவாமிநாதனின் தீர்வு
- விவசாயிகளைக் குறை கூறுவது எந்த தீர்வையும் அளிக்காது.
- அதற்கு பதிலாக, அரிசி உயிரிப் பூங்காக்களை அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கால்நடைத் தீவனம் ஆகியவற்றை உருவாக்க முடியும்.
- அரிசி வைக்கோலில் பல்வேறு பொருளாதாரப் பயன்பாடுகள் உள்ளன.
- தென்னிந்தியாவில், விலங்குகளின் தீவனமாக பொருளாதார மதிப்பு மிக்கதாக இந்தத் தாளடிகள் கருதப் படுவதால் அவை அங்கு எரிக்கப் படுவதில்லை.