TNPSC Thervupettagam

தாவரங்களை உண்ணும் பனிச் சிறுத்தைகள்

June 17 , 2024 14 days 83 0
  • ஆசியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் காணப்படும் பனிப் பிரதேச வேட்டையாடி உண்ணும் ஊண் உண்ணி உயிரினமான பனிச் சிறுத்தைகளானது, தாவரங்களை உண்பதாக ஜப்பானிய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • உடல் முழுவதும் உரோமம் கொண்ட இந்த உயிரினமானது குறிப்பாக மைரிகேரியா இனத்தைச் சேர்ந்த தாவரங்களை உண்ணுகிறது.
  • இந்தத் தாவரங்கள் பெரும்பாலும் புதர் இனங்கள் ஆகும் என்பதோடு இவை ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • பனிச் சிறுத்தைகளானது தாவரங்களை உண்பதாக பதிவு செய்யப்பட்ட முதல் பெரும் பூனை இனம் அல்ல.
  • உலகில் 41 பெரும் பூனை இனங்கள் உள்ளன.
  • ஆராய்ச்சியாளர்கள் முன்னதாக இதில் 24 இனங்களின் சாணத்தில் தாவர எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்