பிரபல தாவரவியலாளரான டாக்டர் K.S. மணிலால் கேரள மாநிலத்தின் திருச்சூரில் சமீபத்தில் காலமானார்.
அவர் டென்மார்க் ஆளுநர் ஹென்ட்ரிக் அட்ரியன் வான் ரீட் என்பவரால் தொகுக்கப் பட்ட 17 ஆம் நூற்றாண்டின் இலத்தீன் மொழி கையெழுத்துப் பிரதியான ஹோர்டஸ் மலபாரிக்கஸை மொழிபெயர்த்து அதன் சிறுகுறிப்பினை வெளியிட்டார்.
அவரது ஆய்வுகள் என்பவை 19 புதிய தாவர இனங்களைக் கண்டுபிடிக்க வழி வகுத்த நிலையில் அவற்றில் நான்கு இனங்களுக்கு அவரது நினைவாக பெயரிடப்பட்டது.
1989 ஆம் ஆண்டில் இந்திய ஆஞ்சியோஸ்பெர்ம்/பூக்கும் தாவரங்கள் வகை பிரித்தல் சங்கத்தின் (IAAT) நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.
அவர் 1999 ஆம் ஆண்டில் இந்தியாவின் தாவரவியல் சங்கத்தின் தலைவராகவும், 1984 முதல் 1986 ஆம் ஆண்டு வரை பொருளாளராகவும் பணியாற்றினார்.
அவர் விஸ்வம்பர் பூரி பதக்கம் (1990), Y.D.தியாகி தங்கப் பதக்கம் (1998), மற்றும் E.K.ஜானகி அம்மாள் வகை பிரித்தல் விருது (2003) ஆகியவற்றினைப் பெற்றுள்ளார்.
தாவரவியலில் அவர் ஆற்றிய மிகச் சிறப்பானப் பங்களிப்பிற்காக 2020 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் இராணி பீட்ரிக்ஸ் அவர்களால் வழங்கப்பட்ட நெதர்லாந்தின் ஆபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆரஞ்சு-நாசாவ் விருதை அவர் பெற்றார்.
இந்த விருதைப் பெற்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையை இவர் பெற்றார்.