தேசிய ஆங்கில நாளிதழான தி இந்து, செப்டம்பர் 20, 2018 அன்று வெற்றிகரமாக தனது 140வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றது.
நாட்டின் பழமையான செய்தித்தாள்களில் ஒன்றான இது 1878-ம் ஆண்டு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பித்த சமயத்தில் இப்பத்திரிக்கையானது நமக்காக என்று பொருள்படும் “Ourselves” என்ற தலைப்பில் வாரப்பத்திரிக்கையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1889-ம் ஆண்டு ஆங்கில தினசரியாக மாறியது.
தென்னிந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் தி இந்து செய்தித்தாள் விற்பனையாகிறது. மேலும் இது 1995 ஆம் ஆண்டில் ஆன்லைன் (நிகழ்நேர) பதிப்பை வழங்கிய முதலாவது இந்திய செய்தித்தாளாகும்.
தனது ஆண்டு விழாவை குறிப்பிடும் வகையில் தனது வாசகர்களுக்காக சிறப்பு இணைப்பாக “The Hindu @ 140” என்ற இணைப்பை இது வெளியிட்டு இருக்கின்றது.
தனது 140வது ஆண்டு விழாவை அனுசரிப்பதற்காக தி இந்து லவுன்ச் அமைப்பு தனது இணையதள அங்காடியான” The Hindu Lounge Online” என்பதை நிறுவியிருக்கின்றது.