TNPSC Thervupettagam

திடீர் இடையடுக்கு மண்டல வெப்பமாதல்

January 28 , 2021 1402 days 723 0
  • தென்னிந்தியாவானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜனவரி 17 வரை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில் மிக அதிகப்படியான மழைப் பொழிவை (வழக்கத்தை விட 10  மடங்கு அதிகமாக) பெற்றுள்ளது.
  • விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தக் குளிர்கால மழைப் பொழிவானது ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட திடீர் இடையடுக்கு மண்டல வெப்பமாதல் காரணமாக ஏற்பட்டு உள்ளது.
  • திடீர் இடையடுக்கு மண்டல வெப்பமாதல் என்பது துருவ இடையடுக்கு வெப்ப நிலையானது 50 டிகிரி செல்சிஷியஸ் வரை அதிகரிக்கும் ஒரு நிகழ்வாகும்.
  • இது வட அரைக் கோளத்தில் மேற்குக் காற்றுகளின் ஜெட் துருவக் காற்றோட்டமானது இயற்கையாக ஏற்படும் வானிலை அமைப்புகளினால் பாதிக்கப்படுவதற்கு முன்பாக ஏற்படுகின்றது.
  • இது பொதுவாக துருவ சுழல் காற்று என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இது துருவப் பகுதிகளில் ஏற்படும் குறைந்த காற்றழுத்தத்தின் ஒரு சுழற்சிக் கூம்பு ஆகும்.
  • இது குளிர்காலத்தில் வலுவானதாக இருக்கும்.
  • இது துருவ மற்றும் நடுப்பகுதி அட்சரேகைப் பகுதிகளுக்கிடையே நிலவும் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக நிகழ்கின்றது.
  • இது இடையடுக்கு மண்டலத்தில் சுழல்கின்றது.
  • அடுக்கு மண்டலம் என்பது புவியின் மேற்பரப்பில் 10 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டர் உயரம் வரை பரவியுள்ள வளிமண்டல அடுக்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்