TNPSC Thervupettagam

திடீர் இலாப வரி ரத்து

December 8 , 2024 14 days 62 0
  • உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கச்சா எண்ணெய் மற்றும் ஜெட் விமான எரி பொருள் (ATF), டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான 30 மாத திடீர் இலாப வரியை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
  • இந்தியாவானது முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று எரிசக்தி நிறுவனங்களின் வழக்கத்தினை விட அதிக இலாபத்திற்கு வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இணைந்தது.
  • உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஒரு டன்னுக்கு 23,250 ரூபாய் என்ற (ஒரு பீப்பாய்க்கு 40 டாலர்) திடீர் இலாப வரி விதிக்கப்பட்டது.
  • முந்தைய இரண்டு வாரங்களில் இருக்கும் சராசரி எண்ணெய் விலைகளின் மீதான அடிப்படையில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரி விகிதங்கள் மறுமதிப்பாய்வு செய்யப்பட்டன.
  • அரசாங்கமானது, இந்த வரியை அமல்படுத்திய முதல் ஆண்டில் சுமார் 25,000 கோடி ரூபாயும், 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 13,000 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 6,000 கோடி ரூபாயும் வரி வசூலாகப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்