உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான திடீர் இலாப வரியை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
சிறப்பு கூடுதல் கலால் வரியாக (SAED) விதிக்கப்பட்ட இந்த வரியானது டன்னுக்கு 1850 ரூபாய் முதல் சுழியமாக குறைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுழி அளவாகக் குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கடைசியாக SAED ஆனது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் தேதியன்று சுழி அளவில் குறைக்கப்பட்டது.
எதிர்பாராத நிகழ்வின் காரணமாக, ஒரு தொழில் எதிர்பாராதவிதமாக மிகப் பெரிய லாபத்தை ஈட்டும்போது அந்த இலாபத்தின் மீது அரசினால் திடீர் இலாப வரி விதிக்கப் படுகிறது.