TNPSC Thervupettagam

திடீர் வரியில் குறைப்பு

July 24 , 2022 727 days 351 0
  • சர்வதேச விலை வீதங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் ஜெட் விமான எரிபொருள் மீதான திடீர் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று, இந்தியா சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீது திடீர் வரியை விதித்தது.
  • திடீர் வரி என்பது ஒரு நிறுவனத்திந மீது அரசாங்கத்தால் விதிக்கப்படும் ஒற்றை முறை வரியாகும்.
  • அந்த நிறுவனங்கள் அவற்றின் பொறுப்பினைச் சாராமல் வரும் ஆதாயங்களைப் பெறும் நிறுவனங்களை இலக்காக வைத்து இந்த வரியானது விதிக்கப்படுகிறது.
  • இந்த வரியானது திடீரென பெருகும் இலாபத்தின் மீது விதிக்கப்படும் அதிகபட்ச வரி விகிதமாகும்.
  • இது இலாபத்தின் மீது விதிக்கப்படும் சாதாரண வரி விகிதங்களை விட அதிக அளவிலான ஒற்றை முறை வரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்