ஒருங்கிணைந்த புலிகள் வாழ்விடப் பாதுகாப்புத் திட்டம் (ITHCP) ஆனது புலிகள் வளங் காப்புத் திட்டத்தின் மீதான நான்காம் கட்டத்திற்கான திட்ட வரைவு அறிக்கைக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது பெரும் பூனை இனங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலை மேற்கொண்டுப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் இந்தக் கட்டத்தில் புலிகளோடுச் சேர்த்து இதர பிற உயிரினங்களையும் பாதுகாக்கச் செய்வதற்காக அவற்றையும் இதில் சேர்க்கும் வகையில் இது மேலும் விரிவுபடுத்தப் படுகிறது.
சிறுத்தைகள் மற்றும் சுந்தா படைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு இனங்களும் தமது பாதுகாப்பிற்காக தற்போது இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதியுடையவை.