TNPSC Thervupettagam

திட்டம் 17A என்பதின் ஹிம்கிரி

December 18 , 2020 1349 days 667 0
  • சமீபத்தில் கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் (Garden Reach Shipbuilders and Engineers - GRSE) அமைப்பானது இந்தியக் கடற்படைக்காக 17A திட்டத்தின் ஒரு கப்பலான “ஹிம்கிரியை” அறிமுகப் படுத்தியுள்ளது.
  • GRSE நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டு வரும் 3 கப்பல்களில் முதலாவது கப்பல் இதுவாகும்.
  • இந்தக் கப்பலானது ஹூக்ளி நதி நீரில் செயல்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
  • இது மறைந்திருந்துத் தாக்கும் நீலகிரி வகுப்பைப் சேர்ந்த ஒரு கப்பலாகும்.
  • இந்தியக் கடற்படையின் நீலரிகி வகுப்பைச் சேர்ந்த கப்பல்கள் ஹிம்கிரி, தூணகிரி, உதய்கிரி, விந்தியகிரி மற்றும் தாராகிரி ஆகியவையாகும்.
  • இந்தத் திட்டமானது 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்து.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட (உயர் ரக) வகையில் மொத்தம் 7 கப்பல்கள் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட உள்ளன.
  • இதில் 4 கப்பல்கள் மகான் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட உள்ளன. மீதம் உள்ள 3 கப்பல்கள் GRSE கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப் பட உள்ளன.
  • 17A திட்டத்தின் கப்பல்கள் ஒரு வழிகாட்டு ஏவுகணை வகைக் கப்பல்களாகும்.
  • இந்த வகைக் கப்பலானது சில நேரங்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஒரு வகை போர்க் கப்பலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்