சமீபத்தில் கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் (Garden Reach Shipbuilders and Engineers - GRSE) அமைப்பானது இந்தியக் கடற்படைக்காக 17A திட்டத்தின் ஒரு கப்பலான “ஹிம்கிரியை” அறிமுகப் படுத்தியுள்ளது.
GRSE நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டு வரும் 3 கப்பல்களில் முதலாவது கப்பல் இதுவாகும்.
இந்தக் கப்பலானது ஹூக்ளி நதி நீரில் செயல்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
இது மறைந்திருந்துத் தாக்கும் நீலகிரி வகுப்பைப் சேர்ந்த ஒரு கப்பலாகும்.
இந்தியக் கடற்படையின் நீலரிகி வகுப்பைச் சேர்ந்த கப்பல்கள் ஹிம்கிரி, தூணகிரி, உதய்கிரி, விந்தியகிரி மற்றும் தாராகிரி ஆகியவையாகும்.
இந்தத் திட்டமானது 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்து.
இந்தத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட (உயர் ரக) வகையில் மொத்தம் 7 கப்பல்கள் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட உள்ளன.
இதில் 4 கப்பல்கள் மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட உள்ளன. மீதம் உள்ள 3 கப்பல்கள் GRSE கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப் பட உள்ளன.
17A திட்டத்தின் கப்பல்கள் ஒரு வழிகாட்டு ஏவுகணை வகைக் கப்பல்களாகும்.
இந்த வகைக் கப்பலானது சில நேரங்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஒரு வகை போர்க் கப்பலாகும்.